வரும் 28 ஆம் தேதி திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மேலும் அவர் முதன்மை செயலாளராக இருக்கும் துரைமுருகன் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது. மதிமுக மாநாட்டில் கருணாநிதியின் புகைப்படத்தை துரைமுருகன் திறந்து வைப்பார் என வைகோ நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.