இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. இதுகுறித்து, ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் கூடுதல் அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி மூலம் இதுகுறித்து ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.