எய்ம்ஸ் மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை

Forums Inmathi News எய்ம்ஸ் மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11529
  Kalyanaraman M
  Keymaster

  ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ள எய்ம்ஸ் மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்குவிசாரணை நடத்தி வருகிறார். ஜெயலலிதா இறப்புக் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வலியுறுத்திய நிலையில், நேற்று  எய்ம்ஸ் இதய நோய் சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக், நுரையீரல் நிபுணர் ஜி.சி.கில்னானி, மயக்கவியல் துறை நிபுணர் அஞ்சன் டிரிகா ஆகிய மூவரும் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். சுமார் 6 மணி நேரம் ஆறுமுகசாமி அவர்களிடம் விசாரணை நடத்தினார். இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று மீண்டும் ஆஜராகியுள்ள அந்த மருத்துவர்கள் மூவரிடமும், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்குவிசாரணை நடத்தி வருகிறார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This