கொள்ளிடத்தில் புதிய கதவணை அமைக்கப்படும் என தமிழக முதல்வர்

Forums Inmathi News கொள்ளிடத்தில் புதிய கதவணை அமைக்கப்படும் என தமிழக முதல்வர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11528
    Kalyanaraman M
    Keymaster

    திருச்சி முக்கொம்பில் உடைந்த அணையின் கிழக்கே நூறு மீட்டர் தொலைவில் 410கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டப்படும் எனத் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    திருச்சி முக்கொம்பு அணையில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் 8 தூண்களும் 9 மதகுகளும் புதனன்று இரவு இடிந்து விழுந்தன.  இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி முக்கொம்புக்கு வந்து அணை உடைந்த இடத்தைப் பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முக்கொம்பு அணை, நீரின் அழுத்தத்தால் உடைந்ததாகத் தெரிவித்தார்.

    உடைந்த அணையின் கிழக்கே நூறு மீட்டர் தொலைவில் புதிய கதவணை கட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This