பெரியாறு அணை திறந்ததால் தான் வெள்ள பெருக்கு என்ற வாதம் தவறு என தமிழக முதல்வர்

Forums Inmathi News பெரியாறு அணை திறந்ததால் தான் வெள்ள பெருக்கு என்ற வாதம் தவறு என தமிழக முதல்வர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11527
  Kalyanaraman M
  Keymaster

  முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்ததாலேயே கேரளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகக் அம்மாநில அரசு கூறுவது தவறு எனத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

  திருச்சியில் பேசிய அவரிடம், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது வெள்ளத்திற்கு காரணம் எனக் கேரள அரசு குற்றஞ்சாட்டியுள்ளது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேரளத்தில் அனைத்து அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்ததாலேயே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், முல்லைப் பெரியாறு அணையில் நீர்தேக்கும் அளவைக் குறைப்பதற்காகக் கேரளம் வீண்பழி சுமத்துவதாகவும் தெரிவித்தார்.

  கேரளத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதற்குப்பின் ஒருவாரம் கழித்தே முல்லைப்பெரியாறு அணை திறக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This