தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் காப்பர் கழிவுகளால், ஆறுகளின் நீரோட்டம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்தால், பாரபட்சமாக செயல்படக்கூடும் என்று வேதாந்தா நிறுவனம் கூறியது. இந்நிலையில், விசாரணை ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி எஸ்.கே.வசீப்தரை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமனம் செய்துள்ளது. இவர் பஞ்சாப், ஹரியான உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர்.