ஸ்டெர்லைட் ஆலை: ஆய்வுக்குழுவில் இடம்பெறும் நீதிபதியின் பெயர் இன்று அறிவிப்பு

Forums Inmathi News ஸ்டெர்லைட் ஆலை: ஆய்வுக்குழுவில் இடம்பெறும் நீதிபதியின் பெயர் இன்று அறிவிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11474
    Inmathi Staff
    Moderator

    ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகுறித்து ஆய்வு செய்வதற்கான குழுவில்இடம்பெறும் நீதிபதியின் பெயர் இன்றுஅறிவிக்கப்படவுள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல தமிழக அரசு அனுமதி மறுப்பதாகவும், கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான நிபுணர் குழு தமிழக அரசிடம் இல்லை என்றும் வாதிடப்பட்டது.
    அதேவேளையில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் காப்பர் கழிவுகளால், ஆறுகளின் நீரோட்டம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

    ஆனால், இக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்தால், பாரபட்சமாக செயல்படக்கூடும் என்று வேதாந்தா நிறுவனம் கூறியது. இந்நிலையில், ஆய்வுக் குழுவில் இடம்பெறவுள்ள முன்னாள் நீதிபதி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரி என மூன்று பேரின் பெயரை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று அறிவிக்கவுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This