சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 58 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க வேண்டும்

Forums Inmathi News சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 58 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க வேண்டும்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11463
    Kalyanaraman M
    Keymaster

    தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலம் 58 ஏக்கரை மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகே சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட 58.17 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது. நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்க விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

    நிலத்தை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்து விடலாம் என்றும் நிலத்தின் சந்தை மதிப்பு 10 கோடி ருபாயை பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிபதி நூட்டி ராமமோகன்ராவ் உத்தரவிட்ட நிலையில், அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் உடனடியாக நிலத்தை மீட்க வேண்டும் என்றும் நீதிபதி எஸ்.எம்சுப்ரமணியம் உத்தரவிட்டார். இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை அடுத்து 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் வழக்கை விசாரித்தார்.

    இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவை பிறப்பித்தார். அதில், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள சுமார் 58 ஏக்கர் அரசு நிலத்தை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும் என்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்தின் தீர்ப்பை உறுதி செய்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This