கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகளை கொட்டவந்த வாகனங்கள் சிறைபிடிப்பு

Forums Inmathi News கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகளை கொட்டவந்த வாகனங்கள் சிறைபிடிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11462
    Kalyanaraman M
    Keymaster

    கன்னியாகுமாரியில் கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகளை கொட்டவந்த வாகனங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

    கேரளாவில் இறைச்சி கழிவுகளை கொட்ட அம்மாநில அரசு தடை செய்துள்ளது. இதனால் கேரளா மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொட்டி விட்டு செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் வழியாக இரண்டு டெம்போக்களில் கோழிகழிவுகள் ஏற்றப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியினர் கழிவுகள் ஏற்றப்பட்டு வந்த வாகனத்தை வழிமறித்து வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். தகவலறிந்து வந்த போலீசார் இரண்டு வாகனங்களையும் காவல்நிலையம் கொண்டு சென்றனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This