திவாலாகும் நிலையில் தமிழக அரசு – டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

Forums Communities Farmers திவாலாகும் நிலையில் தமிழக அரசு – டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11442
    Inmathi Staff
    Moderator

    கடன் சுமை காரணமாக தமிழக அரசு திவாலாகும் நிலையில் உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் 30ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே நேற்று(ஆகஸ்ட் 21) நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். மருத்துவர் ராமதாஸ் நிகழ்ச்சியில் பேசுகையில், “தென் பெண்ணை ஆற்றைப் பாலாற்றுடன் சேர்க்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. ஆனால், அதை ஆட்சியாளர்கள் நிறைவேற்ற மாட்டார்கள். ஏனென்றால் ஆற்றில் தண்ணீர் வந்தால் மணல் அள்ள முடியாது. ஆட்சியாளர்களுக்கு பணம் கொடுப்பது மணல் தான்.

    இன்னும் கொஞ்சம் நாளில் தமிழ்நாடு திவாலாகும். ரூ.10 லட்சம் கோடி வரை கடன் உள்ளது. ஒவ்வொரு தனி மனிதன் தலையிலும் ஒரு லட்சம் ரூபாய் கடன் உள்ளது. ஒரு நாளைக்கு ரூ.170 கோடி வட்டி கட்டுகின்றனர். இந்த அரசு தேவையா?, மாற்றம் வர வேண்டும். மாணவர்கள், படித்தவர்கள், பெண்கள் நினைத்தால் இந்த மாற்றத்தைக் கொண்டுவர முடியும்” என்று பேசினார்

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This