கேரளா மாநிலத்தின் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒருமாத சம்பளத்தை அளிப்பதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்ததால், பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி அம்மாநிலமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது . மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை பாதிப்பால் இதுவரை 373 பேர் உயிரிழந்துள்ளனர். இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு நாடுகளும், மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், கேரளா மாநிலத்தின் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒருமாத சம்பளத்தை அளிப்பதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ள பாதிப்புக்கு ஆளான கேரளாவில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்க உள்ளேன் என அறிவித்துள்ளார்.