தூத்துக்குடியில் கடந்த மேய் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 11 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர் கோயில் பிச்சை மகன் கிளாஸ்டனும் பலியானார்.
இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசனைக் கொண்ட ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு நியமித்தது. இந்த கமிஷன், தூத்துக்குடியில் பலரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, இக்கமிஷன் சார்பில் துப்பாக்கி சூட்டில் பலியான கிளாட்சனுக்கும் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வரும் 29 ஆம் தேதி காலை 10 மணியளவில் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் இருக்கும் அரசு சுற்றுலா மாளிகையில் செயல்படும் விசாரணை கமிஷன் முன் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது.