இலங்கை விவகாரத்தில் மீனவர்களுக்கு கடற்படை பாதுகாப்புக்கு வழி உண்டா ? : ஹைகோர்ட்

Forums Communities Fishermen இலங்கை விவகாரத்தில் மீனவர்களுக்கு கடற்படை பாதுகாப்புக்கு வழி உண்டா ? : ஹைகோர்ட்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11377
    Inmathi Staff
    Moderator

    தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்புக்கு செல்ல வாய்ப்புள்ளதா? என பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை ஹகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து சர்வதேச நீதிமன்றம்  விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

    இலங்கை கடற்படை கைது செய்த 3,033 மீனவர்கள் மீட்பு, 29 மீனவர்கள் இலங்கை வசம் உள்ளனர் என்றும் 1991 -2013 வரை நடந்த 168  துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 85 மீனவர்கள் பலி மற்றும் 180 மீனவர்கள் படுகாயம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுக்காக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தமிழக அரசு  குறிப்பிட்டிருந்தது.

    இதனையடுத்து தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படை கப்பல்கள் பாதுகாப்புக்கு செல்ல வாய்ப்புள்ளதா? என்று மத்திய அரசுக்கு, சென்னை  உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் நடுக்கடலில் இந்திய எல்லையை மீனவர்கள் கண்டறிவது கடினம் என்று தெரிவித்த  நீதிபதிகள், இலங்கை மீனவர்களும் எல்லைத் தாண்டி மீன்பிடிக்கின்றனர் என்றனர். மீனவர்களின் படகுகளில் நாட்டிக்கல் மைல் அளவிடும்  கருவி பொருத்தினால் உதவியாக இருக்கும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This