திருவண்ணாமலை மாவட்டம் மீன்பிடி தொழிற்சங்க அமைப்பு கூட்டம் 19-8-2018 அன்று ரவி தலைமையில் போயம்பள்ளிதண்டா கிராமத்தில் நடைபெற்றது, சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளை சேர்ந்த 17 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்துகொண்டனர் .
கூட்டத்தில் தமிழ் நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சிஐடியூ மாநில பொதுச்செயலாளர்
சி.ஆர்.செந்தில்வேல் சிஐடியூ மாவட்ட செயலாளர் தோழர் ஆர். பாரி மற்றும் சிஐடியூ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சாத்தனூர் அணையின் மீன்பிடி உரிமையை தனியாருக்கு கொடுத்ததின் விளைவாக ஏலம் எடுத்த ஆதிக்க சக்திகள் பாரம்பரிய மீனவர்களை தென்பென்னை ஆற்றில் மீன்பிடிக்க விடாமல் தடுத்து வருகின்றனர், மேலும் அடியாட்களை வைத்து மிரட்டுவது போன்ற அடாவடி செயலிலும் ஈடுபடுகின்றனர். எனவே சாத்தனூர் அணையின் மீன்பிடி உரிமையை தனியாருக்கு
வழங்கியதை ரத்து செய்து, மீன்துறை நிர்வாகமே ஏற்று நடத்து, என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யபட்டது.