கடல் பாசி உற்பத்தியில் அமைச்சர் ஜெயகுமாருக்கு மீனவர் பேரவை பாராட்டு

Forums Communities Fishermen கடல் பாசி உற்பத்தியில் அமைச்சர் ஜெயகுமாருக்கு மீனவர் பேரவை பாராட்டு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11365
  Inmathi Staff
  Moderator

  கடந்த   ஆண்டு   சென்னையில்   தேசிய   மீனவர்  பேரவை   சீ-டாட்  என்ற   தொண்டு  நிறுவனத்துடன்   இனைந்து   நடத்திய   தேசிய  அளவிலான   கடல்  பாசி   குறித்த  மாநாட்டிற்கு   தலைமை வகித்த   தமிழக   மீன்வளத்துறை   அமைச்சர்   திரு.  டி.  ஜெயக்குமார்   அறிவித்த   திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டதை   அடுத்து   தமிழகத்தில்   கடல்  பாசி   உற்பத்தி  செய்ய   மத்திய   உப்பு   மற்றும்   கடல்   வேதியியல்   பொருட்கள்   ஆராய்ச்சி   நிறுவனத்துடன்   (S.M.C.R.I)  ரூ. 4  கோடி   மதிப்பிலான   திட்டத்திற்கு  தமிழக   மீன்வளத்துறை   கடந்த வாரம்  ஒப்பந்தம்  செய்து   கொண்டுள்ளனர்.

  2017ம்  ஆண்டு   செப்டம்பர்  28ந்  தேதி   தேசிய   மீனவர்   பேரவை  சார்பில்   கடல்   பாசி   உற்பத்தியை    ஊக்குவிப்பதற்கான    தேசிய   அளவிலான    மாநாடு   சென்னையில்    நடைபெற்றது.

  தேசிய   மீனவர்   பேரவையும்   சீ-டாட்   என்ற   தொண்டு    நிறுவனமும்  இணைந்து  நடத்திய   இந்த   மாநாடு   பள்ளிக்கரணையில்   உள்ள என்.ஐ .ஒ.டி   வளாகத்தில்   நடைபெற்றது .  இந்த  மாநாட்டிற்கு   தமிழக  மீன்வளத்துறை   அமைச்சர்  திரு . டி . ஜெயக்குமார்   தலைமை  வகித்தார்.   மத்திய   மீன்வளத்துறை   இணை  அமைச்சர்   திருமதி   கிருஷ்ணா   ராஜ்   சிறப்பு  விருந்தினராக   கலந்து   கொண்டார்

  தமிழக  மீன்வளத்துறை   செயலாளர்   திரு.  கோபால்,  தமிழக  மீன்வளத்துறை   இயக்குனர்   திரு.  தண்டபாணி,   கடல்  பாசி  வல்லுனர்கள்,   அறிவியலாளர்கள்,   கடல்   பாசி   உற்பத்தியில்   ஈடுபட்டுள்ள   பெண்கள்  உள்பட   பலர்     கலந்துக்கொண்டனர்.

  இந்த  மாநாட்டில்   பேசிய   தமிழக   அமைச்சர்    டி .  ஜெயக்குமார்   கடல்  பாசி  உற்பத்தியில்   தமிழக   அரசு   தீவிர   கவனம்   செலுத்துவதற்கான  பல்வேறு   திட்டங்களை  அறிவித்தார்.

  அமைச்சரின்  அறிவிப்பின்  படி   மீன்வளத்துறை  பல்வேறு  தொடர் நடவடிக்கைகளை   மேற்கொண்டு  தற்போது    கடந்த    வாரம்   மத்திய  அரசின்   மத்திய   உப்பு   மற்றும்   கடல்  வேதியியல்   பொருட்கள்   ஆராய்ச்சி   நிறுவனத்துடன்  கடல்   பாசி   உற்பத்தியை   கூடுதலாக்க ரூ.4   கோடி   அளவிலான   திட்டங்களுக்கு   ஒப்பந்தம்   ஏற்படுத்தியுள்ளனர் .

  அமைச்சர்   டி.  ஜெயக்குமார்    அவர்களின்   முயற்சி   பாராட்டுக்குரியது  என்று  மீனவ  சமுதாய   தலைவர்கள் மற்றும் தேசிய மீனவர் பேரவையினர்   மகிழ்ச்சியும்,  பாராட்டுகளையும்   தெரிவித்துள்ளனர்.

  மாநாட்டில்   சிறப்புரையாற்றிய   மத்திய  மீன்வளத்துறை  இணை அமைச்சர்   திருமதி.  கிருஷ்ணா  ராஜ்,  மத்திய   அரசு   மூலம்   நாடு  முழுவதிலும்   கடல்  பாசி  உற்பத்தியை   அதிகரிக்க  நடவடிக்கை   எடுக்க ப்   படும்   என்று   அறிவித்தார்.

  கடல்   பாசி   உற்பத்தியை   கூடுதலாக்குவது   குறித்து   பிரதமரின்  கவனத்திற்கும்   கொண்டு  செல்லப்படும்  என்று  மத்திய அமைச்சர்   அறிவித்து   இருந்தார்.

  அதே   போன்று   கடல்  பாசி   தேசிய   மாநாடு   சென்னையில்  நடைபெற்ற   அடுத்த   வாரத்தில்   “மனதோடு   பேசுகிறேன்”    என்ற  நிகழ்ச்சியில்   பேசிய   பிரதமர்   திரு.    நரேந்திர    மோடி    கடல்பாசியின்  அற்புதத்தன்மையைப்பற்றி  குறிப்பிட்டு   கடல்   பாசி   உற்பத்தியில்  மீனவர்கள்   ஈடுபட்டால்   அவர்களின்  வாழ்வாதாரத்திற்கு   கூடுதலாக  வருவாய்   ஈட்டமுடியும்  என்றும்   எனவே   கடல்  பாசி  உற்பத்தியில்  ஈடுபட  அரசு  உதவி  செய்யும்  என்று   அறிவிப்பு   வெளியிட்டார்.

  இதனால்  தற்போது  நாட்டின்   பல  பகுதிகளில்   கடல்  பாசி  உற்பத்தியில்   அரசு   கவனம்  செலுத்த   தொடங்கியுள்ளது,.

  ஜப்பான்,  கொரியா,  சைனா,  பிலிப்பைன்ஸ்  மற்றும்   இந்தோனேஷியா   நாடுகளைப்போல்   இந்தியாவில்   இதுவரை   கடல்  பாசி  உற்பத்தியில் கவனம்  செலுத்தியதில்லை.

  ஆனால்   தற்போது   மத்திய  அரசின்   ஊக்குவிப்பால்   இந்தியாவில்   மிக   அதிக   நீளம்   கொண்ட  1,600  கிலோமீட்டர்   கடற்கரையுடன்   உள்ள  குஜராத்   மாநிலம்   உள்பட   பல   பகுதிகளிலும்   நிலைமை   மாற  தொடங்கியுள்ளது.

  உலகம்   முழுவதும்   உயர்வகை  உணவு  பட்டியலில்   இடம் பிடித்துள்ள   கடல்  பாசி   உற்பத்திக்கான   திட்டங்களை பேராவலுடன்   உருவாக்கி   வருகின்றனர்.

  குஜராத்   மாநில  பாவ்  நகரை   தலைமையிடமாக  கொண்டுள்ள  மத்திய  அரசின்  மத்திய  உப்பு  மற்றும்   கடல்   வேதியியல்   பொருட்கள் , ஆராய்ச்சி  நிறுவனம்   குஜராத்   மாநில   மீனவர்களுக்கு   குழுக்கள்   வாரியாக   குறிப்பிட்ட   வகை  கடல்  பாசிகளை   உற்பத்தி  செய்ய   பயிற்சி  அளித்து   வருகின்றனர்.

  பயிற்சி  பெற்ற  சில   குழுக்கள்   சோம்நாத்  மாவட்டத்தில்   கடல்  பாசி   வளர்ப்பில்  ஈடுபட்டு  வருவாய்   ஈட்ட   தொடங்கியுள்ளனர்.

  18  பேர்   கொண்ட   ஒவ்வொரு   குழுவும்   40   நாட்கள்   வீதம்   2   முறை அறுவடைச் செய்து   ரூ . 1  லட்சத்தி    15  ஆயிரம்   வருமானம்   பெற்று   சாதனை   படைத்துள்ளனர்.

  18  பேர்   கொண்ட   ஒரு   குழுவினர்   80   நாட்களில்   5.8  டன் பதப்படுத்தப்பட்ட   கடல்  பாசியை   உற்பத்தி  செய்ததாக   கடல்  பாசி  விஞ்ஞானி   டாக்டர்.  மோனிக்கா  காவாலே   தெரிவித்துள்ளார்.

  2019ம்  ஆண்டுக்குள்   162   விவசாய்கள்   இத்தகைய   பயிற்சி  அளிக்கப்படுவதற்கு   மத்திய   அரசின்   தேசிய   மீன்வள   மேம்பாட்டு  கழகம்   (N.F. D.B),  மத்திய  உப்பு   மற்றும்   கடல்   வேதியியல்   ஆய்வு நிறுவனத்திற்கு   ரூ.  26  கோடி  மானியம்   அளித்துள்ளதாகவும்   அதிகாரி  ஒருவர்   தெரிவித்தார்.

  மருந்து   தயாரிப்பு   மற்றும்   ஆராய்ச்சி   பணிகளுக்கு   கடல்  பாசியில் இருந்து   தயாரிக்கப்படும்   ஜெல்  மிக  அதிக  அளவில்  பல  நாடுகளுக்கு  தேவைப்படுவதாகவும்   வல்லுனர்கள்   கருத்து   தெரிவித்துள்ளனர்.

  ஜப்பான்,   கொரியா   போன்ற   பிறநாடுகளில்  சுஷி  உணவகங்களுக்கு தேவைப்படும்   சுவையான  கடல்  பாசி  உணவு   வெகுவிரைவில்  குஜராத் மாநிலத்திலிருந்து  மிக  பெரிய   அளவில்   ஏற்றுமதி  செய்யப்படுவதற்கான  வாய்ப்பு  உள்ளதாக  குஜராத்  மாநிலத்தில்   எடுக்கப்பட்டுவரும்  நடவடிக்கைகளை   மேற்கோள்   காட்டி   தேசிய   மீனவர்  பேரவை   தலைவர்  புதுச்சேரி   முன்னாள்   எம்.எல்.ஏ   மா.  இளங்கோ  கருத்து தெரிவித்துள்ளார்.

  மத்திய  அரசின்   தேசிய  மீன்வள   மேம்பாட்டுக்  கழகம்   (N.F.D.B), மத்திய  உப்பு  மற்றும்  கடல்  வேதியியல்  ஆராய்ச்சி   நிறுவனம்  (S.M.C.R.I)  ஆகிய   அமைப்புகள்   மேற்கொண்டுள்ள   தீவீர   நடவடிக்கைகளை   13  கடற்கரை  மாநிலங்களும்   சரியான   முறையில்  பயன்படுத்தி  கொண்டால்   கடல்   பாசி   ஏற்றுமதி  மூலம்   பல  ஆயிரம்  கோடி   அன்னிய  செலாவணி   ஈட்டக்கூடிய   நாடாகவும்,    8118   கிலோமீட்டர்   நீள   கடற்கரையை   கொண்ட   இந்திய   நாடு   நாட்டிலேயே   மிக  அதிக   அளவிலான   கடல்  பாசி   உற்பத்தி  மற்றும்   ஏற்றுமதியில் முதன்மையாக   நாடாக   திகழ   முடியும்   என்று   மா. இளங்கோ   நம்பிக்கை   தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This