பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு புதிய கட்டுப்பாடு : பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

Forums Inmathi News பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு புதிய கட்டுப்பாடு : பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11352
  Kalyanaraman M
  Keymaster

  10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.

  தமிழகத்தில் இதுவரை பள்ளி இறுதி பொதுத்தேர்வை எழுதித்தேர்ச்சி பெற்றவர்கள், நேரடியாக பிளஸ் 2 தேர்வை, தனித்தேர்வராக எழுத இயலும் என்ற விதி இருந்தது. ஆனால், தற்போது பிளஸ் 1 தேர்வும் அரசு பொதுத்தேர்வாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது. அவர்கள் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர் தான், பிளஸ் 2 தேர்வை எழுத முடியும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This