தமிழகத்தில் மழை, வெள்ளப்பாதிப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் : அமைச்சர் தகவல்

Forums Inmathi News தமிழகத்தில் மழை, வெள்ளப்பாதிப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் : அமைச்சர் தகவல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11350
    Kalyanaraman M
    Keymaster

    மழை வெள்ளப்பாதிப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்தார். ரூ.19 கோடி செலவில் 3 ரோபோடிக் வாகனங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது என்று கூறினார். சென்னை நகர வெள்ளப்பாதிப்பை தடுக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதி கோரப்பட்டடுள்ளது என்று தெரிவித்தார். சென்னையில் 1894 கிமீ நீளத்துக்கு 7,351 வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். சென்னை குடிநீர் வாரியம், பாதாள சாக்கடை தூர்வாரும் இயந்திரங்கள் தயாராக உள்ளது. மேலும் மழை வெள்ளம் அதிகமாக பாதிப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து முகாம்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார். 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்படும் என்று கூறினார். மேலும் 24 மணி நேரம் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி சேவையும் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மழை வெள்ளப்பாதிப்பு குறித்து பல்வேறு இடங்களில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This