8 வழிசாலைக்கு நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

Forums Inmathi News 8 வழிசாலைக்கு நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11349
    Kalyanaraman M
    Keymaster

    சேலம்- சென்னை 8 வழிசாலைக்கு நிலம் எடுக்க ஐகோர்ட் இடைக்கால தடைவிதித்துள்ளது. பூவுலகு நண்பர்கள் உட்பட விவசாயிகள் பலர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளை அதிகாரிகள் துன்புறுத்துவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், பவானி சுப்புராமன் அமர்வு அதிரடி தீர்பளித்துள்ளனர்.

    சேலத்தில் இருந்து தமருமபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை, காஞ்சி மாவட்டங்கள் வழியாக 8 வழிச்சாலை போடப்படுகிறது. 8 வழிச்சாலை விளைநிலங்கள் வழியாக செல்வதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாய நிலங்களில் செல்வதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி நிலம் அளவிடும் பணியை அரசு நடத்தியது. 5 மாவட்டங்களிலும் நிலங்களை அளந்து கல் நடும் பணியையும் அரசு முடித்துள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணையை செப்டம்பர் 10-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This