கட்டாய சீட் பெல்ட்,ஹெல்மெட் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Forums Inmathi News கட்டாய சீட் பெல்ட்,ஹெல்மெட் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11348
  Kalyanaraman M
  Keymaster

  தமிழகத்தில் கட்டாய சீட் பெல்ட், ஹெல்மெட் குறித்த நடவடிக்கை பற்றி நாளை மறுதினம் அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சீட் பெல்ட், ஹெல்மெட் அணிவது குறித்து முறையாக நடவடிக்கை இல்லை என்று சென்னையை சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் அரசாணையை அமல்படுத்த கோரி வழக்கு தொடர்ந்தார்.

  சீட் பெல்ட் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்தியது குறித்து தமிழக அரசு நாளை மறுதினம் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதவிர இருசக்கர வாகனங்களில் பகல் நேரங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது குறித்து தமிழக அரசு சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This