அதிமுக சட்ட விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்யும்படி கே.சி.பழனிசாமி அளித்த மனு மீது 4 வாரத்தில் விசாரித்து முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது, கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில், தங்களுக்கு நோட்டீஸ் கொடுக்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரினார்.
இதனை ஏற்க மறுத்த டில்லி உயர்நீதிமன்றம், கே.சி.பழனிசாமி புகார் மனு மீது செப்., 13 வரை எந்த முடிவும் எடுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பதிலளிக்க கே.சி.பழனிசாமிக்கு உத்தரவிட்டுள்ளது.