பூங்கார் அரிசி – கர்ப்பிணிகளுக்கு மிக முக்கிய உணவு!

Forums Communities Farmers பூங்கார் அரிசி – கர்ப்பிணிகளுக்கு மிக முக்கிய உணவு!

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11321
  Inmathi Staff
  Moderator

  ‘பெண்களுக்கான அரிசி’ என்று பூங்கார் அரிசியைச் சொல்லலாம். காரணம், பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கச் செய்வதில் பூங்காருக்கே முதலிடம்.
  தமிழகத்தில் அதிகம் பயிரிடக்கூடிய இந்த பாரம்பரிய வகை நெல், 70 நாள் பயிர். எந்த தட்பவெப்ப நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் வளரும்; குறைந்த மூலதனத்தில் அதிக லாபம் தரும் பயிர்.
  கர்ப்பிணிகள், ஆறு மாதங்களுக்குப் பின், பூங்கார் அரிசி கஞ்சியைக் குடித்தால், சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். இது தவிர, குறைந்த அளவிலான நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் தயாமின் அதிகமாக இந்த அரிசியில் உள்ளது.
  குழந்தைப் பேறுக்கு உதவும். முக்கியமாக, பாலுாட்டும் தாய், இந்த அரிசியை சாப்பிட்டால், இதில் உள்ள சத்துக்கள், தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கும் கிடைக்கும்.
  எந்த வகையான பாரம்பரிய அரிசியாக இருந்தாலும், இரண்டு முறை கழுவிய பின், எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  அரிசி ஊறிய தண்ணீரிலேயே வேக வைக்கலாம். இது இன்னும், சுவையைக் கூட்டிக் கொடுக்கும்.
  பூங்கார் அரிசியை வேக வைத்து, சாதமாக சாப்பிடலாம் அல்லது அரிசியை ஊற வைத்து, நிழலில் உலர்த்தி ஒன்றிரண்டாக அரைத்து மாவாக்கி, தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து, புட்டு செய்யலாம். நைசாக மாவாக அரைத்து, இடியாப்பம், பால் கொழுக்கட்டை செய்யலாம்.ருசியான கஞ்சியாகவும் வைக்கலாம்.
  பட்டை, சோம்பு, ஒரு ஆழாக்கு பூங்கார் அரிசிக்கு, ஏழு கிளாஸ் தண்ணீர் ஊற்றி, அதனுடன் சிறிதளவு பாசிப்பயிறு, தேவையான அளவு மிளகாய்த் துாள், தனியாத் துாள், கரம் மசாலா, உப்பு மற்றும் மஞ்சள் துாள் சேர்க்கவும். பின், அதனுடன் சிறிதளவு வெங்காயத்தை ஒன்றிரண்டாக மிக்சியில் அரைத்து சேர்த்து, குக்கரில் வேக வைக்க வேண்டும். சோம்பு, ஏலக்காயை தனியாக தாளித்து, வேக வைத்த கஞ்சியுடன் சேர்க்கலாம்.
  இந்தக் கஞ்சியுடன், தேங்காய் பாலை சேர்த்து, கர்ப்பிணிகளும் பருகலாம்.மூன்று ஆழாக்கு பூங்கார் அரிசி, ஒரு ஆழாக்கு கறுப்பு உளுந்து, சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து, மாவாக ஆட்ட வேண்டும்.
  இதில் இட்லி, தோசை செய்து, தேங்காய் அல்லது புதினா சட்னியுடன் சாப்பிடலாம்.
  இந்த அரிசியை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். குறிப்பாக, நோயுற்றவர்களும் கூட, இந்த அரிசி உணவை எடுத்துக் கொள்ளலாம். காலையில், இட்லி, தோசை, இடியாப்பம், கஞ்சி, புட்டு உள்ளிட்ட வற்றையும்; சாதமாக மதிய வேளையிலும்;
  இரவில், இட்லி, தோசை, இடியாப்பமாக செய்து சாப்பிடலாம். எந்த ஒரு பக்க விளைவையும் தராத அரிசி இது.
  நன்றி: தினமலர்

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This