திருப்பூர் திருமூர்த்தி அணையில் இருந்து ஆகஸ்ட் 23 முதல் 2019 ம் ஆண்டு மே 31 வரை தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 700 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் 2786 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.