Forums › Communities › Farmers › அமில நிலங்களையும் சீர்திருத்துவது எப்படி?
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 5 months ago by
Inmathi Staff.
-
AuthorPosts
-
August 20, 2018 at 4:48 pm #11316
Inmathi Staff
Moderatorஅமில நிலங்களையும் சீர்திருத்தி விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என்று ராஜாக்கமங்கலம் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை உதவி இயக்குநர் வாணி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
குமரி மாவட்டத்தில் மலைச்சரிவு மிகுந்த பகுதிகளிலும், மழை அளவு அதிகமுள்ள பகுதிகளிலும், பூமிக்கடியில் அமிலத்தன்மை உடைய பாறைகள் உள்ள இடங்களிலும் மண் ணில் உள்ள சுண்ணாம்பு நாளடைவில் நிலத்தில் இருந்து வெளியேறி அமிலத்தன்மை மிகுந்துவிடுவதால் அந்த நிலம் அமிலத்தன்மைபெற்று விடுகிறது.
நல்ல நிலம் என்பது கால்சியம் இணைந்த களித்துகள்கள் கொண்டது. ஆனால் அமில நிலத்தில் நைட்ரஜன் இணைந்த களித்துகள்கள் அதிகம் இருப்பதால் மண்ணின் கார அமில நிலை (பிஎச்) ஆறுக்கு குறைவாக காணப்படுகிறது. அமில நிலத்தில் பெரும் பிரச்சனை பாஸ் பரஸ் கிட்டாத நிலையாகும்.
இரும்பு மற்றும் அலுமினியம் ஆகியவை அமில நிலையில் கரைந்து பாஸ்பேட்டுடன் இணைந்து இரும்பு பாஸ்பேட் ஆகவும், அலுமினியம் பாஸ்பேட் ஆகவும் மாறிவிடுகின்றன. இந்தநிலையில் உள்ள பாஸ்பேட்களை பயிர்கள் எடுத்துக்கொள்ள இய லாது. அலுமினியம், சிலிக்கேட்டுடன் பொட்டாஷியம் சேர்த்து பொட்டாசியம் சிலிக்கேட் ஆக பயிர்கள் எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு கிட்டா நிலையை அடைந்துவிடுகிறது.
துத்தநாகம், மாங்கனீசு, இரும்பு, அலுமினியம் ஆகியவை அமில நிலத்தின் அபரிமிதமான நிலையில் உள்ள தால் அவற்றின் நச்சுத்தன்மை அதிகமாகி பயிருக்கு தீங்கு விளைவிக்கின்றன.
கால்சியம், மக்னீஷியம், மாலிப்டீனம், ஆகியவை அமில நிலையில் பற்றாக் குறை நிலைமை அடைவ தால் பயிர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
வேர் முண்டுகளில் வாழும் ரைசோபியங்கள் அமிலத்தன்மை உள்ள நிலங்களில் செவ்வனே செயல்படாது.
அமில நிலங்களை சீர்திருத்தி மேம்படுத்த மண் ஆய்வு பரிந்துரையின் அளவுப்படி சுண்ணாம்புக்கலை தூளாக்கி அல்லது சுட்ட சுண்ணாம்பு அல்லது நீற்றிய சுண் ணாம்போ இட வேண்டும். பின்னர் உலர்ந்த நிலையில் உழுது நன்றாக புழுதியாக்க வேண்டும்.
நீற்றிய சுண்ணாம்பில் சிறிது நீர் சேர்த்து நீர்த்திய பின்னர் வெப்பம் தணிய ஆற்றிட வேண்டும்.
இதனை நிலத்தில் சீராக பரப்பிட வேண் டும்.
இதனை பயிர் செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பாக செய்திட வேண் டும்.
சுண்ணாம்பு இட்ட மறுநாள் நஞ்சையில் நீர் விட்டு தொழியாக்க வேண் டும். தோட்டம் புன்சையில் நீர் விடாமல் உழுதுவிட வேண் டும். முக்கியமாக கவனிக்க வேண் டியது நீரை வடியவிடக்கூடாது.
விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் நிலத்தில் மண் மாதிரிகள் சேகரித்து நிலம் மற்றும் பயிர் விபரங்களுடன் மண் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு செய்து மண்ணின் அமில மற்றும் களர் நிலங்களையும் அவற்றிற்கான சீர்திருத்த விபரங் கள் மற்றும் உர பரிந்துரைகளையும் அறிந்துகொள்ளலாம்.இதற்கு ஆய்வு கட்டணமாக பேரூட்டங்கள் ஆய்வு செய்திட ரூ.10ம், நுண் ணூட்டங்கள் ஆய்வு செய்திட ரூ.10ம் செலுத்த வேண்டும்.
அவ்வாறு ஆய்வு செய்வதில் மண் அமிலத்தன்மை உடைய தாக இருப்பின் மேற்கூறியவாறு விவசாயிகள் அமில நிலங்களை சீர்திருத்தி நன்றாக மேம்படுத்தி அதிக மகசூல் பெற்றிடலாம்.
நன்றி: தினகரன்-
This topic was modified 2 years, 5 months ago by
Inmathi Staff.
-
This topic was modified 2 years, 5 months ago by
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.