கேரளாவில் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் முதல் துவங்க உள்ளது.
இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் குடிமை பணிகள் குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
ஊரக, நகர்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.