தமிழ் நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன் வளப் பல்கலைகழகத்தில் தொழிற்கல்வி ஓராண்டு பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதன் மூலம், மீன் மற்றும் இறால் வளர்ப்பு , மீன் பதன தொழில் நுட்பவியல் போன்ற படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
இதற்கான கல்வித் தகுதி 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.500 எனவும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.250 அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 31 ஆம் தேதியாகும்.
விண்ணப்பங்களை http://www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.