- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 5 months ago by
Kalyanaraman M.
-
AuthorPosts
-
August 19, 2018 at 7:25 pm #11273
Kalyanaraman M
Keymasterகேரள மாநிலம் கொச்சி அருகே கடந்த 7ம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்ற முனம்பம் பகுதி விசைப்படகு மீது “தேஷ் சக்தி ” என்ற இந்திய அரசின் கப்பல் கழகத்துக்கு சொந்தமான மிகப்பெரிய எண்ணை டேங்கர் கப்பல் மோதியது.
அன்று பின்னிரவு நேரத்தில் நங்கூரம் இட்டு இருந்த விசைப்படகில் மீனவர்கள் 14 பேர் இருந்தனர் . இவர்களில் 13 பேர் தமிழக மீனவர்கள் ஆவார்கள் .
மிகப்பெரிய கப்பல் மோதியதை அறிந்த அருகாமையில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் , உயிரிழந்த இரண்டு மீனவர்களின் சடலங்களையும், காயமடைந்த மூன்று மீனவர்களை பலத்த காயங்களுடன் மீட்டனர்.
பின்னர் 11ம் தேதி அன்று அப்படகிலிருந்த ஷிஜு என்ற ஒரே மலையாளி மீனவர் சடலம் மீட்கப்பட்டது .
படகையும், மீனவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்ட ஐ.என்.எஸ். சட்லஜ் என்ற கடற்படை கப்பல் கொச்சினிலிருந்து 44 கடல் மைல்களுக்கு அப்பால் அந்த மீனவரின் சடலத்தை அழுகிய நிலையில் மீட்டுள்ளது .
இந்த நிலையில் படகில் மோதிய தேஷ் சக்தி கப்பல் தற்போது மங்களூர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது .
அந்த கப்பலின் அடித்தளத்தில் சோதனை நடத்திய விசாரணை அதிகாரிகள் எண்ணை டேங்கர் கப்பல் அடிப்பகுதியில் விசைப்படகின் பெயிண்ட் ஒட்டிக் கொண்டிருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.
மீன்பிடி படகு மீது மோதியது அந்த கப்பல்தான் என்று உறுதி செய்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கப்பல் படை அதிகாரி ஒருவர் கொச்சினிலிருந்து 44 கடல் மைல் தொலைவில் கடலில் 75 அடி ஆழத்தில் விசைப்படகு மூழ்கியிருப்பதாக கூறியுள்ளார்.
12 நாட்களாகியும் இதுவரை இன்னும் கண்டுபிடிக்காமல் இருக்கும் மீனவர்களின் சடலங்கள் மூழ்கியுள்ள படகின் உள்ளையே இருக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
எனவே, அந்தப்படகை அங்கிருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதான் மீனவர்கள் கோரிக்கையாகும்.
இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கப்பல் படை மூழ்கியுள்ள படகை வெளியே கொண்டு வந்து மீனவர்கள் காணாமல் போன பிரச்சனையின் உண்மை நிலையே கண்டறிய வேண்டும். என்று தேசிய மீனவர் பேரவை தலைவர் புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா. இளங்கோ , மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மத்திய அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.