தேனி வைகை அணையின் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அறையில் இருந்து நாளை (ஆகஸ்ட் 20) முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் 71 அடி நீர்மட்டம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 68.60 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 3695 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 60 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வைகை கரையோர மக்களுக்கு 2 ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், மக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ வேண்டாம் எனவும் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி கேட்டுக் கொண்டுள்ளார். கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.