ஓகேனக்கல்லில் சிக்கியுள்ள 50 மாடுகளை மீட்க கோரிக்கை

Forums Inmathi News ஓகேனக்கல்லில் சிக்கியுள்ள 50 மாடுகளை மீட்க கோரிக்கை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11201
  Inmathi Staff
  Moderator

  தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட மாடுகள் வெள்ளத்திற்கு நடுவே சிக்கியுள்ளது.

  தமிழக -கர்நாடக எல்லையில் ராசிமணல் திட்டு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த திட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்குத் தேவையான புல்வெளிகள் காணப்படுகின்றன.

  கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்துள்ள பாண்டுரங்கன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, சுந்தரம், கோவிந்தராஜ் ஆகியோர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு மேய்ச்சலுக்காக 50 மேற்பட்ட மாடுகளுடன் ராசிமணல் திட்டில் விட்டுள்ளனர்.

  அந்தச் சமயத்தில் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து 2,00,000 கனஅடி அளவுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளில் 50 மாடுகள் ராசிமணல் திட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள அளவு கடந்த காவிரி வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டது.  மணல்திட்டைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துகொண்டதால் மாடுகள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டது. இதை தொடர்ந்து தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  ஆனால் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். காவிரியில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கால்நடைகளை மீட்க முடியாமல் திரும்பி விட்டனர்.  காவிரி ஆற்றில் விநாடிக்கு 2,00,000 கனஅடி வரை தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் ராசிமணல் திட்டில் சிக்கியுள்ள 50 மாடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. 10 நாள்களாக உணவு இல்லாமல் சிக்கித் தவித்து வரும் வாயில்லாத அந்த 50 ஜீவன்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர் உரிமையாளர்கள்.

  Source : Polimer News

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This