கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை நீர் குடியிருப்புக்குள் புகுந்தது. பொள்ளாச்சி-வால்பாறையில் பல இடங்களில் மண்சரிவு மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வால்பாறையை அடுத்த ஐயர்பாடி ரோப்வே எஸ்டேட் பகுதியில் தோட்ட தொழிலாளர் குடியிருப்புகள் உள்ளன. மலைச்சரிவில் உள்ள எஸ்டேட்டில் சுமார் 300 அடிக்கு பூமியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வீடுகளின் தரை மற்றும் சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.. இதனால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.