செங்கன்னூரில் ஒரே இரவில் 3200 மக்களை மீட்ட மீனவர்கள்

Forums Communities Fishermen செங்கன்னூரில் ஒரே இரவில் 3200 மக்களை மீட்ட மீனவர்கள்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11195
  Inmathi Staff
  Moderator

  கேரளாவில் பெய்துவரும் கனத்த மழையில் சிக்கி பரிதவித்த மக்களை மீட்க திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கேரளாவின் பத்தனம்திட்ட, செங்கன்னூர், ரானி உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் லட்சக்கணக்கானோரை மீட்டுள்ளனர். குறிப்பாக, நேற்றிரவு செங்கன்னூர் தொகுதி சிபிஎம் எம்.எல்.ஏவான சஜி செறியான் அபயக் குரல் எழுப்பிய நிலையில், அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  சிக்கியிருந்த 3200 க்கும் மேற்பட்ட மக்களை தூக்கத்தை தொலைத்து மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,  மீட்பு நடவடிக்கைகளின் போது, தங்கள் படகுகள் சேதமுற்றாலும் கூட, அவற்றையும் பொருட்படுத்தாமல், மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இதே போன்றே, ஈரோடு,சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீனவர்கள் மீட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This