தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி, திண்டுக்கல், கோவை, நெல்லை, நீலகிரியில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையோரங்களில் அடுத்த 2 நாளில் கனமழை பெய்யும் என்றும், வெப்பச்சலனத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மேகமூட்டமாக இருக்கும் என்றும் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால், ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.