ராமேஸ்வரம் பாம்பன் ரயில்வே பாலம் அருகே புதிய ரயில் பாலம் அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணி தொடங்கின.
மண்டபம் – இராமேஸ்வத்தை இணைக்கும் பாம்பன் இரயில் பாலம் நூறாண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. உப்பு காற்றினால் பாலத்தின் தாங்கு கட்டைகள் மற்றும் தூக்கு கருவிகள் அடிக்கடி பழுதாயின. இந்நிலையில் கடந்த மாதம் பாலத்தில் ரயில்வேதுறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது புதிய பாலம் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சார்பில், பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதிய பாலம் அமைக்க 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.