உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று கலைஞர் நினைவிடத்திற்கு தமிழக அரசு இடம் ஒதுக்கியுள்ளது. திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த 6 ஆம் தேதியன்று காலமானார். அவரை அடக்கம் செய்ய திமுக தரப்பில் மெரினாவில் இடம் ஒதுக்கக் கோரிய போது சட்ட சிக்கல்களை காரணம் காட்டி தமிழக அரசு மறுத்தது.
இதனைத் தொடர்ந்து, திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, உயர் நீதிமன்றம் மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கொடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கலைஞரின் உடல் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கலைஞர் நினைவிடம் கட்டதமிழக அரசு 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.