வாகன சோதனைக்கு இனி டிஜிட்டல் ஆவணங்களும் செல்லத்தக்கது-டிஜிபி அறிவிப்பு

Forums Inmathi News வாகன சோதனைக்கு இனி டிஜிட்டல் ஆவணங்களும் செல்லத்தக்கது-டிஜிபி அறிவிப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11110
  Inmathi Staff
  Moderator

  வாகன சோதனை செய்யும் போது, வாகனத்தின் ஒரிஜினல் சான்றிதழ்கள் இருக்க வேண்டும் என்ற விதி அமலில் இருந்து வருகிறது.

  இந்த நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிலாக்கர் முறை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் எம்-பரிவாஹன் கைபேசி செயலி ஆகியவை குடிமக்களின் ஓட்டுநர் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் அல்லது வேறு ஏதேனும் சான்றிதழ்களை டிஜிட்டல் வடிவில் வைத்திருக்கக் கூடிய வசதிகளை வழங்குகின்றன.

  இந்த டிஜிலாக்கர் அல்லது எம்-பரிவாஹன் முறையில் உள்ள மின்னணுவியல் ஆவணங்கள், ஒரிஜினல் ஆவணங்களுக்கு இணையானது எனவும் அவை சட்டப்படியாக செல்லத்தக்கவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  எனவே, வாகன சோதனையின் போது டிஜிலாக்கர் அல்லது எம்-பரிவாஹன் மூலம் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

   

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This