சிலை கடத்தல் வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
விசாரணை தொடர்பாக பொன். மாணிக்கவேல் ஒரு அறிக்கை கூட தமிழக அரசுக்கு அளிக்கவில்லை. டிஜிபி நடத்திய ஆய்வு கூட்டத்திற்கும் வரவில்லை. சிலை கடத்தல் வழக்கில், பல வெளிநாட்டவர், வெளிமாநிலத்தவர்களுக்கு தொடர்புள்ளதால் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் தமிழக அரசிடம் இல்லை. சிலை கடத்தல் குறித்து சிபிஐ விசாரிக்க 113 வழக்குகள் பற்றி மத்திய அரசிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.