காவிரியில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், திருச்சியில் காவிரி, கொள்ளிடம் இரு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சமயபுரம் அருகே உள்ள நெம்பர் ஒன் டோல்கேட் பகுதியில், 90 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொள்ளிடத்தில் கட்டப்பட்ட மேம்பாலத்தில், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த அதிகாரிகள், அந்த மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை செய்துள்ளனர். ஏராளமான பொது மக்களும் இதனை நேரில் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.