சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் அளித்த தேநீர் விருந்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புறக்கணித்தனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் பன்வாரிலால், நேற்று (ஆகஸ்ட் 15) தேநீர் விருந்து அளித்தார். கவர்னர் மாளிகையில் நடந்த விருந்தில், முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால், தலைமை நீதிபதி மட்டும் கலந்துகொள்ள மற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த விருந்தை புறக்கணித்தனர்.
கடந்த 12ம் தேதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமானி பதவியேற்ற போது, விழாவில், நீதிபதிகளுக்கு பின் இருக்கைகள் ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து விருந்து நிகழ்ச்சியை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால், நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன.