முல்லை பெரியாறு அணை 3 ஆண்டுகளுக்கு பிறகு 142 அடியை எட்டி உள்ளது. அணையின் மொத்த உயரமான 152 அடியில் 142 அடி வரை தண்ணீர் தேக்க அனுமதி உள்ளது. தேக்கடி மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 142 அடியை முல்லை பெரியாறு அணை எட்டி உள்ளது.
அணைக்கு விநாடிக்கு 16,629 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2200 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் 13 மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவுக்கு விநாடிக்கு 11,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.