நாட்டின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் நல்ஆளுமை விருதுகளை முதல்வர் வழங்கினார்
அப்துல் கலாம் விருது – சென்னை அண்ணா பல்கலைகழகதில் உள்ள வான்வெளி ஆய்வு நிறுவனமான தக்ஷா குழுவுக்கு அப்துல் கலாம் விருது.
சிறந்த துறை : தமிழக அரசின் சிறந்த துறைக்கான முதல் பரிசு பதிவுத்துறைக்கும், 2வது பரிசு உணவுத்துக்கும், 3வது பரிசு சுகாதாரத்துறைக்கும் கிடைத்தது.
சிறந்த மாநகராட்சி : உள்ளாட்சி அமைப்புக்களில் சிறந்த மாநகராட்சியாக திருப்பூர்
சிறந்த நகராட்சி : கோவில்பட்டி, கம்பம், சீர்காழி
சிறந்த பேரூராட்சி : சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், தேனி – பழனிசெட்டிபட்டி 2வது பரிசும், தர்மபுரி – பாலக்கோடு 3வது பரிசும் பெற்றுள்ளன.
சிறப்பு விருது: காவிரி குழுவுக்கும் அதன் தலைவருக்கும்
சிறந்த டாக்டர் விருது: திருப்பூரை சேர்ந்த செந்தில்குமார்
சிறந்த சமூக பணியாளர்: முனைவர் லதா ராஜேந்திரன்.
மாற்று திறனாளிகளுக்காக சிறந்த தொண்டு நிறுவனம்: திருச்சியை சேர்ந்த அறிவாலயம் குழு
மாற்று திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கியதற்கான விருது : டெட் எக்ஸ்போர்ட்ஸ், மதுரை
சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
சிறந்த சமூக பணியாளருக்கான விருது: சிவக்குமார்
கல்பனா சாவ்லா விருது : கட்டையால் சிறுத்தையை விரட்டிய கோவை மாவட்டம் வால்பாறை – பெரியகல்லார் கிராமத்தை சேர்ந்த முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது.
மாநில இளைஞர் விருது :ஆண்கள் பிரிவில் தேனியை சேர்ந்த சி.பாஸ்கரன், கடலூரை சேர்ந்த மகேஷ், நெல்லையை சேர்ந்த அஸ்விதாவுக்கும் விருது வழங்கப்பட்டன.