மேட்டூருக்கு 2 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு: அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

Forums Inmathi News மேட்டூருக்கு 2 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு: அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11007
    Kalyanaraman M
    Keymaster

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 1.38 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் 1.30 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்க கடலின் வடக்கு பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 27 செ.மீ.,ம், சென்னையில் 9 செ.மீ.,ம் மழை பெய்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கனஅடி நீர் வரை வர வாய்ப்புள்ளது. பவானி சாகர் அணை, பெருஞ்சாணை அணை, முல்லை பெரியாறு உள்ளிட்ட முக்கிய அணைகளும் நிரம்பி உள்ளதால் அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்று கூறினார்.

    இதனால் ஆற்றங்கரையோரம், தாழ்வான இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீர்நிலைகளுக்கு அருகில் சென்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். தடை செய்யப்பட்ட தரைப்பாலங்களை மக்கள் கடக்க வேண்டாம்.மிக தாழ்வான பகுதிகளில் வசிப்போர் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள 9 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This