குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பெருஞ்சாணி அணை நிரம்பி வழிகிறது. இதனால், பெருஞ்சாணி அணையில் வந்து சேரும் உபரி நீரை பொதுப்பணித்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், பெருஞ்சாணி அணையில் இருந்துள்ள நீர் வெளியேறும் சானல் பகுதியில் இன்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, வெள்ளம் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.