பாரதியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஊழல், கருப்பு பணம் ஒழியவில்லை என ஆய்வு மாணவர்

Forums Communities Education பாரதியார் பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஊழல், கருப்பு பணம் ஒழியவில்லை என ஆய்வு மாணவர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10970
  Kalyanaraman M
  Keymaster

  கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு கருப்பு பண ஒழிப்பிற்காக 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழக்கப்பட்டு புதிய ரூபாய்க்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. அண்மையில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் உதவிப்பேராசிரியர் பனி நியமன ஆணைக்காக லஞ்சம் பெற்றதால் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏறக்குறைய 80 பணியிடங்கள் தலா  30 லட்சம் பெறப்பட்டு நிரப்பப்பட்டுள்ளது என பல விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆக கணக்கில் எடுத்தால் 80 பணியிடங்களுக்கு 24 கோடி ரூபாயை எட்டுகிறது. இதில் கொடுக்கப்பட்ட பணமும் கருப்பு பணமே, பெற்றவரும் கணக்கில் காட்டாமல் கருப்பு பணமாக தான் பெறப்பட்டுள்ளது. கருப்பு  பணம் இப்படி அதிகாரத்தில் உள்ளவர்களின் கையில் புரளும் போது , அன்றாட வாழ்வில் தினமும் உழைக்கும் கூலி தொழிலார்கள் எப்படி கருப்பு பணம் வைத்திருக்க முடியும்.? பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிக சிரமத்திற்குள்ளானது ஏழைகளும், அடித்தட்டு மக்களும் தான் என்பது தெளிவாக புலனாகிறது.பணமதிப்பிழப்பு நடவடிக்கை எந்த விதத்திலும் கருப்பு பணத்தை ஒழித்து விடவில்லை என்பதும் தெளிவாக புலனாகிறது. மேலும் கருப்பு பணம் எப்படியும் புரண்டு கொண்டு தான் இருக்கிறது. இது தனி மனித நேர்மையை பொறுத்தது. அரசு சரியான நடவடிக்கை எந்த வித பாகு பாடும் இன்றி எடுத்தால் மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க முடியும்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This