பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து புகார் தெரிவிக்க 14417 என்ற இலவச உதவிமைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டரில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பெறப்படும் புகார்கள்மீது 24 மணி நேரத்திற்குள் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விவரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.