நம் நாட்டில் அதிகளவு அங்கக உரங்களையே நிலத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.இதனால் மண் வளம் குறைந்து மகசூலும் குறைந்து கொண்டே இருக்கிறது. தற்பொழுது பசுந்தாள் உரமிடுதல், மட்கிய உரமிடுதல் போன்றவற்றின் பயன்பாட்டால் இந்தியாவானது உணவு பற்றாக்குறையிலிருந்து மீண்டும் உணவு சேமிப்பிற்கு மாற்றமடைந்துள்ளது. மேலும் பசுந்தாள் உரமானது குறைந்த விலையில் கிடைக்கிறது. இல்லையென்றால் நம் நிலத்திலேயே விதைத்தும் நிலத்தின் வளமையை பெருக்கலாம்.பசுந்தாள் உரமானது மண்ணின் அங்கக பொருட்களின் தன்மையை அதிகரிக்கிறது.
பசுந்தாள் உரமிடுதல்:
இது தமிழ்நாட்டில் ஆயிரக்கனக்கான ஆண்டுகளாக நம் விவசாயிகளிடம் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்துவரும் நடைமுறை ஆகும்.இந்த முறையில் பசுந்தாள் பயிர்கள் நிலத்தில் வளர்க்கப்பட்டு பூ பூக்கும் தருணத்தில் அந்நிலத்திலேயே மண்ணோடு சேர்த்து உழப்படுகிறது. இவ்வுரமிடுதலால் பயிர்களில் நைட்ரஜனை நிலை நிறுத்த பயன்படுகிறது.
பசுந்தாள் உரமிடுதலின் நன்மைகள்:
1.பசுந்தாள் பயிர்களானது மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தும் பண்புடையது.இதனால் அடுத்த பயிருக்கான உரத்தேவை 40-60% வரை குறைகிறது.
2. மண்ணின் இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகளை உயர்த்துகிறது.
3.காரத்தன்மை உடைய நிலத்தை நடுநிலைப்படுத்த பயன்படுகிறது.
4.மண்ணில் பொதுபொதுப்புதன்மை மற்றும் காட்றோட்டத்தை அதிகப்படுத்துகிறது.
5.பூச்சித்தொல்லைகளைக் குறைக்கிறது.(வேம்பு,புங்கம் முதலியன)
6.மண் அரிப்பை தடுக்கிறது.
வளர்ப்பு முறைகள்:
பொதுவாக பசுந்தாள் பயிர்களை அனைத்து பருவங்களிலும் வளர்க்க முடியும். பசுந்தாள் பயிர்களை அடர்வாக விதைத்துக்கொள்ள வேண்டும்.சிறப்பு கவனிப்புகள் எதுவும் தேவையில்லை.வயலில் ஒன்றிரண்டு பூக்களை கண்டவுடன் உடனடியாக பசுந்தாள் பயிர்களை மண்ணில் மடக்கி உழுதல் வேண்டும்.பசுந்தாள் பயிர்கள் பூ பூத்துவிட்டால் அதன் சத்துக்கள் காய் வளர்வதற்க்கு சென்றுவிடும். இது குறுகிய காலத்தில் வளரும், அதிக அளவு ஊட்டச்சத்துகளை கொண்டது.
பசுந்தாள் பயிர்கள்:
1.சணப்பை
2.அவுரி
3.கொழிஞ்சி
4.நரிப்பயறு
5.கொள்ளு
6.தட்டைப்பயறு
7.அகத்தி
8.கொத்தவரை
9.தக்கைபூண்டு
10.மணிலா &மற்றும் பிற..…வேம்பு புங்கம் எருக்கு முதலிய மரங்களின் இலைகளை வெளியில் இருந்து கொண்டு வந்தும் நிலத்தில் பயன்படுத்தலாம்.