திமுகவின் செயற்குழு கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்தில், மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் பேசிய, திமுக செயல் தலைவர், ஸ்டாலின், அண்ணாவின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கலைஞரின் ஆசையை நிறைவேற்ற நாங்கள் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். ஆனால், விதிமுறைகள் அப்படி இல்லை எனக் கூறி முதல்வர் மறுத்துவிட்டார். சட்ட ஆலோசனை பெறப்பட்ட போதும் கூட கொடுக்க வேண்டாம் என்றே சொன்னார்கள். இதனையடுத்து, அண்ணாவின் அருகில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கலைஞரின் கனவை நிறைவேற்ற வாய்ப்பு தரும்படி கையை பிடித்து கேட்டோம். அப்போதும் அவர்கள் சம்மதிக்கவில்லை எனக் கூறினார்.