2ஜி வழக்கில் ஆ.ராசா மற்றும் ராஜ்யசபா எம்.பி கனிமொழி ஆகியோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் விடுதலைக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஆ.ராசா உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை நவ.1க்கு ஒத்திவைத்தது.