18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அரசு தரப்பு வாதம் இன்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் பதில் வாதத்திற்காக வழக்கு விசாரணை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த வழக்கில் இரு நபர் பெஞ்சு மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், இந்த வழக்கு மூன்றாம் நீதிபதி முன் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.