காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

Forums Inmathi News காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10866
    Inmathi Staff
    Moderator

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து செல்லத்துரை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

    துணைவேந்தராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை மீது குற்ற வழக்குகள் இருப்பதாக சுட்டிக்காட்டி, அவரை பதவியில் இருந்து நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து செல்லத்துரை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தீர்ப்பு வரும் வரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தரை நியமனம் செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

    இந்த நிலையில் கிரிமினல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உயர் பதவியில் நீடிப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறி, செல்லத்துரையின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன்மூலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தரை நியமிக்க இருந்த தடையும் விலகி இருக்கிறது.

    Source : Polimer News

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This