இயக்குநர் பாரதிராஜா உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீன் நிபந்தனையை நிறைவேற்ற சென்னை வடபழனி காவல்நிலையத்தில் இன்றும் கையெழுத்திட்டார்.
திரைப்பட விழாவில் விநாயகரை இறக்குமதிக் கடவுள் என்று விமர்சித்ததோடு, ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு தலைகுனிவு எனில் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என இயக்குனர் பாரதிராஜா பேசியதாக வடபழனி காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. மத உணர்வுகளை புண்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் பதிவான வழக்கில் பாரதிராஜாவுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று இயக்குநர் பாரதிராஜா, ஜாமீன் நிபந்தனையை ஏற்று வடபழனி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார். இன்று இரண்டாவது நாளாக அவர் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டார்.
Source :Polimer News