திமுக தலைவர் கருணாநிதியின் அடக்கத்திற்கு நிலம் ஒதுக்கக் கேட்டு நடந்த வழக்கு விசாரணையின் போது, மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதற்கு எதிரான வழக்கை தான் வாபஸ் பெறவில்லை என கூறிய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடம் தொடர்பான மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து டிராபிக் ராமசாமி, ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். தனது கருத்தை கேட்காமல் தவறாக புரிந்து கொண்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக டிராபிக் ராமசாமி தலைமை நீதிபதியிடம் கூறினார். இதையடுத்து, கோரிக்கை தொடர்பாக பதிவாளரை அணுக டிராபிக் ராமசாமிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.